விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சின்னசேலம் ஒன்றிய கிராமங்களில் புஞ்சை தரிசில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-03-13 04:17 GMT
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க வட்ட செயலாளர் பழனி தலைமை தாங்கினார். பொருளாளர் சன்னியாசி, துணைத் தலைவர் மருதமுத்து முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், தலைவர் பெரியசாமி, வட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்டக்குழு மூக்கன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட கனியாமூர் மற்றும் ராயர்பாளையம் கிராமங்களில் புஞ்சை தரிசில் வீடு கட்டி குடியிருப்போருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டது.