2024 ஆம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்: அமைச்சர்

2024 ஆம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-04 11:15 GMT

அமைச்சர் சுப்ரமணியன்

2024 ஆம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கும் டெல்டா மாவட்டங்கள் முதல்முறையாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத்த லேப் இன்று தொடங்கப்பட உள்ளது நாகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி நாகை அடுத்த ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூபாய் 254.80 கோடி மதிப்பீட்டில் மூன்று லட்சத்து 44 ஆயிரத்து 481 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் முதல் தளத்தில் புறநோயாளிகள் பிரிவு இரண்டாம் தளத்தில் மகப்பேறு பிரிவு மூன்றாம் தளத்தில் பொது மருத்துவ சிகிச்சை நான்காம் தளத்தில் பொது அறுவை சிகிச்சை பிரிவு ஐந்து மற்றும் ஆறாம் தளத்தில் பத்து அறுவை சிகிச்சை அரக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் 10 லிப்ட் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது பணிகள் முடிந்தும் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனையை திறப்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் தற்சமயம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று பயன்பாட்டிற்கு வந்தது மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை சேவையை தொடங்கி வைத்து நிலையில் நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனையில் சேவைகளை தொடங்கி வைத்து ஏ சி டி வகை மூத்த கட்டாய சுழலும் பயிற்சி மற்றும் மூத்த குடியுரிமை மருத்துவர் ஆண்கள் விடுதி கட்டாய சுழலும் பயிற்சி மற்றும் மூத்த குடியுரிமை மருத்துவர் பெண்கள் விடுதி செவிலியர் குடியிருப்பு முதல்வர் குடியிருப்பு நிலைய மற்றும் உதவி நிலைய மருத்துவ அலுவலர் கட்டணம் மற்றும் வங்கி மற்றும் அஞ்சு நிலையம் ஆகியவற்றில் சேவைகளை தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள்,

2024 இறுதியில் தொடங்கும் என்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கேத் லேப் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இன்று டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்படும் என தெரிவித்தார் மேலும் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,

மழை நீர் தேங்காமல் இருக்க 15 கோடி மதிப்பீட்டில் மண் நிரப்பி சுற்று சுவர் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 33 மாதத்தில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

Tags:    

Similar News