மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2023-11-29 00:46 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரியலூர் அண்ணா சிலையருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக ஆட்சி நடத்தும், மோடி ஆட்சியை வெளியேற்றுவோம் என கோஷமிடபட்டது. மேலும் பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக செயல்படும் பாஜக  அரசை கண்டித்தும் கோஷமிடபட்டது. இதில் ஏஐடியுசி, தொமுச, சிஐடியு, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News