குமரியில் 55வது முறையாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்
குமரியில் 55வது முறையாக சுயேட்சை வேட்பாளர் போட்டியிட உள்ளார்.
குமரியில் ஆளும் பாஜக கட்சி, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நடக்கிறது. இது ஒருபுறம் இருக்க சுயேட்சை வேட்பாளர் ஒருவர் 55-வது முறையாக தேர்தல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த வீடியோகிராபரான நாகூர் மிரான் பீர்முகமது என்பவர் நேற்று கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் சுமார் 40 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சட்டமன்றத் தொகுதி மற்றும் இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் என 54 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 55வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் மக்களுக்கு நல்ல திட்டங்களையும் உதவிகளும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேர்தலில் போட்டிட்டு வருகிறேன்.
தேசிய கட்சிகளுக்கு இணையாக நான் வாக்குகளை பெற்று ஏழாம் இடம் வந்திருக்கிறேன். எனக்கு தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது" என்று தெரிவித்து அதிர்ச்சியூட்டினார்.