பல் செட்டை விழுங்கிய மூதாட்டி

பல் செட்டை விழுங்கிய மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை மூலம் பல்செட் அகற்றப்பட்டது

Update: 2024-05-30 15:45 GMT
பல் செட்டை விழுங்கிய மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை மூலம் பல்செட் அகற்றப்பட்டது

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 25 ஆம் தேதி திருமங்கலத்தைச் சார்ந்த சுப்புலட்சுமி என்ற 57 வயது பெண் தனக்கு பொருத்திருந்த பல் செட்டை தூக்கத்தில் விழுங்கி விட்டதாகவும் இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்,

உடனடியாக அவருக்கு உரிய சிகிச்சை அளித்த விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 45 நிமிடம் தொடர் அறுவை சிகிச்சை செய்து சுப்புலட்சுமி உணவுக்குழாயின் குறுகலான மேற்கு பகுதியில் சிக்கி இருந்த அந்த பல்செட்டை அகற்றினர் தற்பொழுது சுப்புலட்சுமி என்பவர் முழு குணமடைந்து இருப்பதாகவும் இது போன்ற அறுவை சிகிச்சையும் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தெரிவித்தார்.

Tags:    

Similar News