ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு
திண்டிவனத்தில் ரூ.14 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை, அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 25-வது வார்டு ஜெயபுரத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 14 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது, இதற்கு ரவிக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். கவுன்சிலர் ரேகா நந்தகுமார் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதி தாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அங்கு குத்துவிளக்கேற்றினார்.
பின்னர் அவர் அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில் நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, உதவி பொறி யாளர் வெங்கடாசலம், மாவட்ட பொருளாளர் ரமணன், பொதுக் குழு உறுப்பினர் கதிரசேன், மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன், துணை தலைவர் பழனி, நகர துணை செயலாளர் கவுத மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திலீபன், கவுன்சிலர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.