அண்ணா நினைவு தினம்; பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்துக்கு தேமுதிக., பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;
Update: 2024-02-03 06:47 GMT
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்துக்கு தேமுதிக., பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணா 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.பல்வேறு கட்சியினர் அண்ணாவின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அண்ணா அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.