சிவன் கோயில்களில் நடந்த அன்னாபிஷேக விழா

பெரணமல்லூர் இஞ்சி மேடு ஆகிய சிவன் கோயில்களில் நடந்த அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-10-29 11:27 GMT

அன்னாபிஷேகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் இஞ்சி மேடு ஆகிய சிவன் கோயில்களில் நடந்த அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரணமல்லூர் டவுன் பஞ். சில் மிகவும் பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி சமேத திருக்கரைஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று மாலை சனி பிரதோஷ விழா மற்றும் அன்னாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் மூலவர் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், பவானி, அறிவழகன், கலைச்செல்வி உட்பட பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஈஸ்வரனை வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இஞ்சிமேடு பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பெரிய மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருமணி சேரை உடையார் சிவன் கோயில் உள்ளது. இங்கு நேற்று மாலை சனி பிரதோஷ விழா மற்றும் அண்ணா அபிஷேக விழா நடந்தது. முன்னதாக சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து சிவன் கோயில் முன்பு உள்ள நந்தி பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மூலவர் ஈஸ்வரனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் இஞ்சிமேடு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஈஸ்வரனை வழிபட்டனர். கோயில் வளாகத்தில் கோயில் நிர்வாகியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான பெருமாள் தலைமையில் பக்தி சொற்பொழிவு மற்றும் பஜனை வேஷ்டிகளுடன் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டு பெரிய மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. படவிளக்கம்.பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பெரிய மலையில் திருமணி சேரை உடையார் சிவனுக்கு 200 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இஞ்சிமேடு திருமணி நாயகி 250 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் காதம்பரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரணமல்லூர் திருக்கரைஈஸ்வரர் கோயிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் அண்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ‌
Tags:    

Similar News