ஆரணியில் திமுக பிரமுகர் நினைவாக அன்னதானம் வழங்கல்
ஆரணியில் திமுக பிரமுகர் நினைவாக அன்னதானம் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 08:51 GMT
அன்னதானம் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி திமுகவை சேர்ந்த ஒன்றிய மாவட்ட பிரதிநிதியும் ஒப்பந்ததாரருமான ஆர்.சி.ஆரோன் என்பவர் 3ஆண்டுக்குமுன்பு மறைந்தார் அவரது நினைவாக திமுக சார்பில் பழையபேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமையில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி அன்னதானம் வழங்கினார்
நிகழச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஒன்றியக்குழு உறுப்பினர் அலெக்ஸ்ஆரோன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளார் ஜெயராணி ரவி,மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளார்கள் எஸ். மோகன், எம்.சுந்தர், துரைமாமது, மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சியம்மாள்சீனிவாசன்,நிர்வாகிகள்கே.டி.ராஜேந்திரன், குட்டி சபாபதி, பொன்சேட்டு, மணிமாறன், இளையராஜா, அக்பர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.