அண்ணாமலை ஐபிஎஸ் படித்ததே பொய் சொல்வதற்காக தான் - நடிகர் கருணாஸ்

தினமும் 10 பொய்யாவது சொல்லாமல் தூங்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவர் அண்ணாமலை ஆனால் படித்தவன் சொன்னால் உண்மையாக இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள். நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் "கோட்டாவை" பத்தி பேசலாமா? அப்படி பேசுவது தவறு. நீங்களும் கோட்டாவில் வந்து படித்து வந்தவர் பதவியை வைத்து மக்களுக்கு சேவை செய்ய துப்பில்லாதவர். அண்ணாமலை அந்தக் கோட்டாவில் சேராமல் இருந்திருந்தால், வேறொருவர் சேர்ந்து இன்று மக்களுக்கு பணி செய்து இருப்பார் என பிரசாரத்தின் போது கருணாஸ் பேசினார்.

Update: 2024-04-16 06:11 GMT

கருணாஸ் பிரசாரம்  

கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நடிகர் கருணாஸ் சூலூர்,ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம் பகுதியில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கருணாஸ் பேசும் போது: அரசியல் என்பது மக்களுக்கான பணியை செய்வது அதுதான் அடிப்படை சித்தாந்தம். கடந்த 10 ஆண்டுகளா பாஜக அரசு மக்களுக்கான பணியை செய்யவில்லை எனவும் மாறாக மக்கள் மீதான அதிகாரத்தை செலுத்துகின்றனர். டெல்லி,ஜார்க்கண்ட் முதல்வர்கள், தெலுங்கானா முதல்வர் மகள்,செந்தில் பாலாஜி என ஏராளமானவரை சிறைபடுத்தி உள்ளனர்.பாஜக சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அமலாக்கத்துறை,சிபிஐ, வருமானவரித்துறை மூன்று துறைகளை வைத்து மீது வழக்கு போடுகின்றனர்.

தவறு செய்தால் வழக்கு போடுவது தவறில்லை ஆனால் அவ்வாறு தவறு செய்வதாக கூறிய யாரையும் இதுவரை ஒன்றிய அரசு நீதிமன்றத்திற்கு வழக்காக எடுத்துச் சென்று தண்டனை வாங்கி கொடுத்ததில்லை மாறாக அச்சுறுத்துவதற்காக மட்டுமே இந்த வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தனி அமைப்புகளை தனது அரசியல் சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள் எனவும் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்க கூடிய அவர்கள் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இந்த நாட்டில் என கேள்வி எழுப்பினார்.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக என்ற அரசு இந்தியாவிற்கு செய்த நன்மை என்ன? தவறுகள் என்ன ? என பட்டியலிட்டு பார்க்க வேண்டும் என்றவர் தினமும் 10 பொய்யாவது சொல்லாமல் தூங்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவர் அண்ணாமலை என்றவர் ஆனால் படித்தவன் சொன்னால் உண்மையாக இருக்கும் என மக்கள் நம்புகிறார்கள் அதுவும் ஐபிஎஸ் படித்தவன் எதற்காக பொய் சொல்லப் போகிறார்கள் என்று நம்புகிறார்கள் அப்படி எல்லாம் எதுவும் கிடையாது என்றும் அவர் படித்ததே பொய் சொல்லத்தான் பகிரங்கமாக சொல்கிறேன் என்றார். நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் "கோட்டாவை" பத்தி பேசலாமா? அப்படி பேசுவது தவறு. நீங்களும் கோட்டாவில் வந்து படித்து வந்தவர் பதவியை வைத்து மக்களுக்கு சேவை செய்ய துப்பில்லாதவர் அவர் அந்தக் கோட்டாவில் சேராமல் இருந்திருந்தால், வேறொருவர் சேர்ந்து இன்று மக்களுக்கு பணி செய்து இருப்பார்.

சேவை செய்யாமல் வெளியே வர காரணம் அவரது தேவை வேறாக உள்ளது என்றவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கிறார் அதற்கு தான் ஐபிஎஸ் படித்தாரா? குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டிய படிப்பை படித்த ஒருவர் மாவட்ட பொறுப்பாளராக தேவை என்றால் உங்கள் மீது வழக்கு இருக்கா இணைத்துக் கொள்கிறோம் என சேர்த்துக் கொள்கிறார். இப்படிப்பட்ட தலைவர் நமக்கு தேவையா? கோவையில் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வது தமிழக மாநில உரிமையை பாதுகாப்பது மட்டுமல்ல, தாய்மொழி தமிழையும் பாதுகாப்பது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் அதன்படி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வேறு என பிரித்து காட்டுகிறார்கள். நான் கிறிஸ்துவ பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன் .அவள் அவளது கடவுளை கும்பிடுகிறார் நான் எனது கடவுளை கும்பிடுகிறேன். எங்களுக்குள் என்ன பிரச்சனை வந்தது? மதம் என்பது நம்பிக்கை மட்டுமே தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து விட்டு,நீட்டை கொண்டு வருவது இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஏஏ குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என எல்லா தவறுகளையும் செய்து விட்டு ஜாதியை இழுத்துக் கொள்வர் எடப்பாடியார். அநியாயமாக இல்லையா? திருடன் திருடன் தான் பாவச் செயல்களை செய்யக்கூடிய நபரும் படுபாதகன் தான். அது எடப்பாடியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஒன்றுதான். சசிகலா தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் என்றார்.

Tags:    

Similar News