தளி: அரசு பள்ளியில் ஆண்டு விழா !

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் மரகட்டதொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2024-03-04 10:42 GMT

அரசு பள்ளியில் ஆண்டு விழா

 கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் மரகட்டதொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ் மற்றும் ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சரண்யாவிற்கு நினைவு பரிசும். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசு வழங்கப்பட்டன. இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News