குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் போக்சோ,குழந்தை திருமண தடைச்சட்டம்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உதவி எண் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி,துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Update: 2023-12-25 08:24 GMT

விழிப்புணர்வு 

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, ஏட்டு சித்ரா ஆகியோர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குழந்தை போக்சோ சட்டம்,குழந்தை திருமண தடைச்சட்டம்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உதவி எண் 1098,181 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி,துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது அவர்கள் கூறியதாவது: குழந்தை செல்வங்களை நாம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு மொபைல் ஃபோன்களை கொடுக்கக் கூடாது. அவர்கள் யாரிடம் பேசுகிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு விழிப்புணர்வு செய்தனர்.
Tags:    

Similar News