ஜீவன் ரக்சா பதக்க விருதுகள் பெற விண்ணப்பக்கலாம்

ஜீவன் ரக்சா பதக்க விருதுகள் பெற விண்ணப்பங்கள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-17 11:10 GMT

ஜீவன் ரக்சா பதக்க விருதுகள் பெற விண்ணப்பங்கள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், விபத்துக்கள், தீ விபத்துக்கள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங் கங்களில் மீட்பு நடவடிக்கைகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரை காப்பாற்றும் மனி தாபிமான இயல்புடைய சிறந்த செயல்களுக்காக, ஜீவன் ரக்சா பதக்க விருது கள் ஒருவரின் உயிரை காப் பாற்றியதற்காக, மூன்று பிரிவுகளின் படி வழங்கப்படுகிறது. சர்வோத் தம் ஜீவன் ரக்சா பதக்கம் மீட்பவரின் உயிருக்கு ஏற்படும் சூழ்நிலையில், ஆபத்து நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

உத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர் களுக்கு இவ்விருது வழங் கப்படுகிறது. ஜீவன் ரக்சா பதக்கம் தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர் களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதிற்கு அனைத்து தரப்பு பாலி னத்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்,ஆயுதப்படை, காவல்படை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீய ணைப்பு படை வீரர்கள் இவ்விருதிற்கு விண்ணப் பிக்க தகுதியுடையவர் கள். ஆனால் அவர்களுடைய பணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

இவ்விருதிற்கான பரிந்துரைகள் இரண்டு வருட காலத்திற்குள் இருத்தல் வேண்டும். அதாவது 01.10.2022க்கு பின்னர் மேற்கொள்ளப் பட்ட மீட்பு நடவடிக்கை கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அதன் படி 2024ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சா பதக்க விரு திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து, வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News