சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கத்தின் மனிதநேய செயலுக்கு பாராட்டு

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க ஊழியர்கள் சாலையில் உடைக்கப்பட்டு கிடந்த பூசணிக்காய்களை அகற்றி சாலைகளை தூய்மைபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-25 01:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் சங்ககிரி நகர் பகுதிகளி உள்ள சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி பூஜை செய்தவர்கள், மற்றும் நகர் பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் உள்ளிட்ட பலர் சாலையில் பூசணிக்காய்களை ஏராளமானோர் உடைத்துள்ளனர். அதனையடுத்து சாலையில் சிதறி கிடக்கும் பூசணிக்காய்களால் ஏற்படும் சாலை விபத்துக்களையும் உயிர்சேதங்களையும் தவிர்க்க சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க ஊழியர்கள் சாலையில் உடைக்கப்பட்டு கிடந்த பூசணிக்காய்களை அகற்றி சாலைகளை தூய்மைபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். அச்சங்க ஊழியர்களின் தன்னலமற்ற சேவைகளை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர்.


Tags:    

Similar News