சேலத்தில் எம்.பி.க்கு பாராட்டு விழா
சேலத்தில் 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.க்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு வைகை பெண்கள் கூட்டமைப்பு சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.க்கு பாராட்டு விழா சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் தேவிகா தலைமை தாங்கினார்.
தேவி குணசேகரன் வரவேற்றார். மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, கூட்டமைப்பு பொறுப்பாளர் முரளி, ரோட்டரி சங்க நிர்வாகி விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அவர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.யின் மக்கள் சேவையை பாராட்டி பேசினர். தொடர்ந்து விழாவில், 5 ஆண்டுகள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக மக்கள் பணியாற்றிய எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.க்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று 5 ஆண்டுகளில் சேலம் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 230 பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு கண்டது, சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுத்தது,
152 நோயாளிகளுக்கு ரூ.4.80 கோடிக்கு மருத்துவ நிதி வழங்கியது, 26 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு பணிகளை செய்ததால் அவருக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் சால்வை அணிவித்தும்,
பூங்கொத்து கொடுத்தும் பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜா, நிர்வாகிகள் ராசி சரவணன், பரிமளம், கீரை பிரபாகரன், பர்னபாஸ், விக்டர், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.