சேலத்தில் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

சேலத்தில் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது. போலீசார் நடவடிக்கை.

Update: 2024-04-15 16:03 GMT

கைது

சேலம் கன்னங்குறிச்சி முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (21). இவர் நேற்று, கன்னங்குறிச்சி அண்ணா மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 பேர்,விக்னேசை வழிமறித்து மிரட்டி பணம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை எனக்கூறவும், அவரை மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதுபற்றி கன்னங்குறிச்சி போலிசில் விக்னேஷ் புகார் கொடுத்தார். எஸ்ஐ துர்காதேவி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விக்னேசிடம் பணம் கேட்டு மிரட்டியது, கன்னங்குறிச்சியை சேர்ந்த குருபரன் (21), கோரிமேடு அன்புநகரை சேர்ந்த சண்முகம் (21) எனத்தெரியவந்தது. அவர்களை இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News