ஆரல்வாய்மொழியில் திருட்டு மது விற்றவர் கைது
ஆரல்வாய்மொழியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-05-06 04:02 GMT
காவல் நிலையம்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு பெருமாள்புரத்தில் திருட்டு மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அந்த பகுதியில் சென்று சோதனை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த அருள் ராஜா (40) என்பவர் ஒரு கட்டிடத்தில் வைத்து அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.