அரூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் -மதிமுக கோரிக்கை

அரூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என தருமபுரி மாவட்ட மதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-10-30 03:14 GMT

மதிமுக கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்ட மறுமலர்ச்சி திமுக கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மறுமலர்ச்சி திமுக தருமபுரி மாவட்ட செயலாளர் கோ. ராமதாஸ் வரவேற்று பேசினார்.மாவட்ட அவைத்தலைவர் துரை கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் சி.கிருபானந்தன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.பி.சரவணன்,பட்டு ராஜா,ஆதிமூலம்,சோபனா குமார், தலைமை செயற்குழு உறுப்பினரும் தருமபுரி நாடாளு மன்ற தொகுதி இணைய தள பொறுப்பாளருமான குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேலம் மாநகர மாவட்ட அவைத்தலைவர் லிபியா சந்திரசேகர்,சேலம் மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர்.சி.சங்கேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மறுமலர்ச்சி திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தும்,மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசினார்கள்.மேலும் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் விடும் திட்டம் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் லாபத் தொகையினை பங்கிட்டு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து ஒகேனக்கல்லில் இருந்து நீரேற்று பம்பு மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். கிராமங்கள் தோறும் மதிமுக கொடியேற்றுதல் மொரப்பூர்-தர்மபுரி ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மறுமலர்ச்சி திமுக புதிய கிளைகள் உருவாக்குதல் மற்றும் கிராமங்கள் தோறும் கட்சி கொடிகளை ஏற்ற ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். அரூர் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும் அரூர் அரசு தலைமை மருத்துவமனையையில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக உள்ள அனைத்து வாக்குச் சவடிகளுக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களை விரைவில் நியமிக்க கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சேலம் சுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர் சேலம் பேராசிரியர் ரகுமான்,பொதுக்குழு உறுப்பினர்கள் ராவணன்,வக்கீல் வேல்முருகன்,பத்மநாபன்,ஒன்றிய செயலாளர்கள் சுகவனம்,வைர நிலா முருகேசன், முனுசாமி,காந்தி,ஜெகநாதன்,வடுகைவேலாயுதம்,முருகேசன்,சிவராமன்,ரத்தினவேல்,லியாகத்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்செல்வி துணை செயலாளர் வள்ளி, கவுசல்யா,ரம்யா,முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பட்டு சுப்ரமணி,முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேசன்,முன்னாள்.மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பழனி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி நன்றி கூறினார்.


Tags:    

Similar News