ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் - பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது வழக்கு

கொடுக்கல் வாங்கலில் பிரச்சனையில் ஆட்டோ டிரைவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2024-02-13 08:17 GMT
பைல் படம் 

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் முஷரத் (36) ஆட்டோ டிரைவரான இவர் டி எம் எஸ் ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவரிடம் ரூபாய் 10 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். பிரவீன் குமார் திருச்சி பாஜக பொது செயலாளராக உள்ளார். கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10 ந்தேதி முஷரப் கெம்ஸ் டவுன் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு 5 பேருடன் மற்றொரு ஆட்டோவில் வந்த பிரவீன் குமார் முஷ்ரப் ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி முஷ்ரப்பிடம் தான் கொடுத்த கடன் பணத்தை திருப்பி கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார். அதற்கு முஷ்ரப் கடன் பணத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். ஏன் என்னிடம் பிரச்சனை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமார் முஷ்ரப்பை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மேலும் பிரவின் குமார் முஷ்ரபுக்கு கொலை மிரட்டல் விடுதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முஷ்ரப் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாஜக நிர்வாகி பிரவீன் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News