ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது தாக்குதல்

உளுந்துார்பேட்டை அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவியை தாக்கிய அ.தி.மு.க., நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.;

Update: 2024-04-19 05:56 GMT

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது தாக்குதல்

உளுந்துார்பேட்டை தாலுகா, செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 48; தி.மு.க., ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான ஜெயக்குமாருக்கும், 42; இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் குளம் மராமத்து பணிக்காக மண் அடிப்பதற்காக அண்ணாமலை தரப்பினர் லாரியை ஓட்டிச் சென்றனர். ஏரி மண் அடிக்க செல்வதாக நினைத்து ஜெயக்குமார் மற்றும் அவரது தரப்பினர் லாரியை தடுத்து நிறுத்தினர்.

Advertisement

இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். ஜெயக்குமார் தரப்பினர் அண்ணாமலையின் வீடு புகுந்து தாக்கி, அவரது மனைவி ஜெயந்தியை ஆபாசமாக திட்டி தாக்கினர். இது குறித்து அண்ணாமலை மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார், அவரது மகன் ஆனந்த், ஆறுமுகம், அவரது மனைவி ராணி, முருகன், ராஜதுரை ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News