சண்முக நதியில் கவனம் - திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை

சண்முக நதியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுமாறு பழனி திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-01-25 05:50 GMT

சண்முக நதி

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா நடைபெற்று வரும் நிலையில் உடுமலை சாலை வழியாக பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் சண்முக நதியில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டு வருவதால் பக்தர்கள் கவனமுடன் நீராட வேண்டும் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News