வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு !

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார்.

Update: 2024-04-08 10:14 GMT

விழிப்புணர்வு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, அனைவரும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஷஜீவனா இன்று (08.04.2024) கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக தொடர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம், உறுதிமொழி எற்பு, கிராமிய நடனம், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், காய்கறி மற்றும் பழங்கள் மூலம் விழிப்புணர்வு, ஏடிஎம் மையங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் ஒட்டுவில்லைகள் ஒட்டுதல் கடந்தமுறை வாக்குப்பதிவு குறைவான பகுதிகளை தேர்வு செய்து, வாக்களிக்க வேண்டி அழைப்பிதழ் வழங்குதல் போன்ற பல்வேறு விதமான தேர்தல் விழிப்புணர்வு பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், #நம் வாக்கு நம் உரிமை, வாருங்கள் வாக்களிப்போம்# என்ற கருப்பொருளை கொண்டு, அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.

Tags:    

Similar News