கிராம காவல் திட்டத்தின் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-03-02 08:35 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உருவாக்கப்பட்ட சிறப்பான திட்டமான கிராம காவல் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கிராம காவலர்கள் தொடர் காவல் பணிகளுக்கு மத்தியிலும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதன்படி பொதுமக்களிடம் பேசிய கிராம காவலர்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் யாரேனும் வெளியூர்களுக்கு செல்லும்போது தங்களது வீட்டை பூட்டி சாவியை வீட்டிற்கு முன்னதாக இருக்கும் எந்த இடத்திலும் வைக்க வேண்வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், காவல்துறையினருக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தங்களது கிராமங்களுக்கு புதிதாக எவரேனும் வந்தால் அவரைப் பற்றிய தகவலை கிராம காவலருக்கோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். கிராமத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். ஏற்கனவே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் அவ்வப்போது சரி பார்க்க வேண்டும். என்றும் கிராம காவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News