திருவாரூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு
திருவாரூரில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 09:35 GMT
எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் காவலர்கள் திருவாரூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலைய பகுதியில் இருந்த பொதுமக்களிடம் பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இணையவழி குற்றங்கள் குறித்தும், வங்கி மேலாளர் போல் பேசி ஓடிபி பற்றி ஏமாற்றுவது குறித்தும் லோன் தருவதாக கூறி முன் பணம் பெற்று ஏமாற்றுவது குறித்தும் மாவட்ட சைபர் கழகம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.