வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி.;
Update: 2024-03-19 07:38 GMT
உறுதிமொழி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 ஆம் ஆண்டு முன்னிட்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களும் எடுத்துக் கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் பாலமுருகன் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.