வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை யாதவர் கல்லூரி வணிகவியல் துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் வாக்களிப்பதில் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரி வணிகவியல் துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் ஆலாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சிச்சிலுப்பை கிராமத்தில் உள்ள வாக்காளப் பெருமக்களுக்கு வாக்களிப்பதில் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் செ. ராஜு தலைமை வகித்தார் கல்லூரி செயலாளர் R. V. N. கண்ணன் ,சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் மற்றும் ஆலாத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் R. சரண்யாராஜவேல் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் க.ப. நவநீதகிருஷ்ணன் முன்னாள் தாளாளர் மற்றும் செயலாளர் சிறப்புரையாற்றினார். மேலும், சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறைத்தலைவர் T. சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்வை வணிகவியல் துறை பேராசிரியர்கள் T. சத்யா தேவி, கா. ராமச்சந்திரன், வே. சந்தோஷ் குமார் மற்றும் மாணவ -மாணவிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் வாக்காளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.