பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு பந்தக்கால்
பெரம்பலூரில் பாஜக மக்களவை தேர்தல் அலுவலகத்திற்கு பந்தக்கால் நாட்டும் விழாவில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.;
Update: 2024-02-11 03:25 GMT
பந்தல்கால் நாட்டு விழா
பாராளுமன்ற தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற அலுவலகம் அமைக்கும் பணிக்கான பந்தக்கால் நடும் விழா, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, பிப்ரவரி 9ம் தேதி பாஜக மாவட்ட தலைவர் மற்றும் பாராளுமன்ற இணை அமைப்பாளர் செல்வராஜ், தலையில், பாராளுமன்ற அமைப்பாளர், லோகிதாசன்- மாநில இணைப் பொருளாளர் சிவ சுப்பிரமணியன் , ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு , பந்த கால் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான அலுவலம் அமைக்கும் பணி துவங்கியது. இதற்கான ஏற்பாட்டை மாவட்ட தலைவர் செல்வராஜ் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில மாவட்ட ஒன்றிய அணி,பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.