பகவதியம்மன் கும்பாபிஷேக விழா

வளையாபாளையம் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-06-12 13:48 GMT

வளையாபாளையத்தில் அருள்மிகு பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, அஞ்சூர் கிராமத்தில் உள்ள வளையா பாளையத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மனுக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ கரியகாளியம்மன் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ணசாமி பரிவார தெய்வங்கள் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை மங்கல இசையுடன் துவங்கியது. பின்னர் யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு, புனித நீரை அதில் வைத்து பூவைத்து,பின்னர் கோவில் கோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர் சிவாச்சாரியார்கள். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அணைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News