மன்சூராபாத் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை

சேத்துப்பட்டு, ரூ.5.22 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள தேவிகாபுரம் - மன்சூராபாத் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.;

Update: 2023-11-17 12:53 GMT

பூமி பூஜை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5.22 கோடி செலவில் தேவிகாபுரம் - மன்சூராபாத் வழியாக செல்லும் ஆத்துரை சாலையில் 4.6 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. தேவிகாபுரம் அடுத்த ஆத்துரை எல்லையில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் எம் எல் ஏ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு புதிய செய்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Advertisement

இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர் வேதவல்லி, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதர், ராகவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், மேற்கு ஆரணி ஒன்றியம் தேவிகாபுரம் கவுன்சிலர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், போளூர் நகர செயலாளர் பாண்டுரங்கன், முன்னாள் துணைச் சேர்மன் பால்சந்திரசேகர், ஒதலவாடி தரணேந்திரன், பஞ். தலைவர் சுந்தரி ராமன், ஆத்துரை காளி, அகஸ்டின் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News