வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

திருச்செங்கோடு நகராட்சியில் பல்வறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2023-11-30 12:48 GMT

திருச்செங்கோடு நகராட்சியில் பல்வறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 16 வடக்கு ரத வீதி இணைப்பு சாலை மற்றும் வார்டு எண் 18 சூரியம்பாளையம் தெரு எண் 7 மற்றும் காட்டுவளவு ஆகிய பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 - 2024 கீழ் ரூ 22.6 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலை அமைப்பதற்காகவும் மற்றும் வார்டு எண் 17 சட்டைய புதூர் பகுதியில் ரூ 16.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டிடம் அமைப்பதற்கும் பூமி பூஜை போடப்பட்டது. இப்பூஜையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர்மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ் பாபு, நகராட்சி பொறியாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் காந்தி மைதிலி, SP.ரவிக்குமார், திவ்யா வெங்கடேஸ்வரன், நகர் மன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், ரமேஷ், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News