மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
கெங்கவல்லி அருகே தலைவாசல், நாவக்குறிச்சி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
Update: 2024-03-12 06:49 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் நாவக்குறிச்சி ஊராட்சியில் கெங்க வல்லி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 9 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை நடந்தது. நாவக்குறிச்சி ஊராட்சி தலைவர் தமிழரசி பிரபு தலைமை தாங்கினார். நல்லதம்பி எம். எல். ஏ. ஒன்றிய குழு தலைவர் ராமசாமி ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பட்டுத்துறை ஊராட்சி தலைவர் ஜெகதீசன், வர கூர் ஊராட்சி தலைவர் ராமசாமி. சிறுவாச்சூர் ஊராட்சி தலைவர் சுமதி பெரியசாமி, நாவக்குறிச்சி முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.