திருப்பத்தூரில் பைக் பேரணி

திருப்பத்தூரில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-25 09:46 GMT

பைக் பேரணியில் கலந்து கொண்டுள்ளார் 

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இ

ப்பேரணியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இருசக்கர வாகனம் ஓட்டி பேரணியை துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தை ஓட்ட முற்பட்டார் அப்போது இருசக்கர வாகனங்கள் ஒட்டி அதிக நாட்கள் ஆகிவிட்டது.

வேணும்னா நான் இருசக்கர வாகனத்தில் அப்படி அமர்ந்து கொள்கிறேன் நீங்க வீடியோ எடுத்துக் கொள்கிறீர்களா? என செய்தியாளர்களை பார்த்து கேட்டார். இந்தச் சம்பவம் அனைவரும் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும் இந்த இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொள்ளும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த பேரணியை‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி ஆசிரியர் நகர் வரை சென்று முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற பேரணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News