மகாகவி பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

Update: 2023-12-12 04:39 GMT

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழாய்வுத் துறையின் சார்பில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மகாகவி, தேசியகவி, முண்டாசுகவி, விடுதலைக்கவி, மக்கள்கவி, எட்டயபுரத்துக்கவி, பாட்டுக்கொரு புலவன் என பல பட்டங்களை பெற்ற பாரதியின் பிறந்தநாள் நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை என். சுபலட்சுமி “கனவு மெய்ப்பட வேண்டும்”என்ற தலைப்பில் பேசினார். மாளிகையினை நோக்கி வீசிய கவிதைத் தென்றலை பாமர மக்கள் வாழும் குடிசையினை நோக்கி வீசச்செய்தவர் பாரதி. மக்கள் சமத்துவமாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என விரும்பியவர் பாரதி. இலக்கியத்திற்கும், சமுதாயத்திற்கும் உள்ள இடைவெளியினை இட்டு நிரப்பியவர் பாரதி, பெண்கள் உயர் அதிகாரங்களில் அமர வேண்டும் என்றும், அதற்கு ஆட்சியில் அவர்களுக்கு பங்கு வேண்டும் என்று விரும்பியவர் பாரதி. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவ்வுலகம் பாரதியை மறக்காது, அவரை என்றும் கொண்டாடும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைப் பேராசிரியப்பெருமக்கள் டி. கே. அனுராதா, ஆர். சாவித்திரி, எஸ். ஜெயமதி, ஏ. லதா, பி. விஷ்ணுபிரியா, சி. கோபியா, ஆர்.ஏ. அனிதா, எஸ். ஹேமலதா, கே. பாரதி, டி. கீதா, கே. பத்மாவதி உட்பட தமிழ்த்துறை மாணவியர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News