கண்டாச்சிபுரத்தில் பாஜக கொடியேற்று விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற பாஜக கொடியேற்று விழாவில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-19 06:33 GMT

பாஜகவினர் 

கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் ஊராட்சியில் பா.ஜ., கொடியேற்றம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சிவா, மாவட்ட துணைத் தலைவர்கள் ஏழுமலை, ராதே ராகுல் முன்னிலை வகித்தனர்.

கிளை நிர்வாகி இளங்கோ வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட பொதுச்செயலாளர் சிவசங்கர் பங்கேற்றார். தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது. முன்னாள் ஊராட்சித் தலைவர் நாராயணசாமி, ராஜேந்திரன், முனியன் உட்பட பலர் பங்கேற்றனர். கிளைத் தலைவர் நாவப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News