அமைச்சர் முன்னிலையில் திமுக - வில் இணைந்த மாற்று கட்சியினர்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜகவினர் அக்கட்டுரையில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.;

Update: 2024-02-05 05:02 GMT
அமைச்சர் முன்னிலையில் திமுக - வில் இணைந்தார்.

குமரி மேற்கு மாவட்டம், கிள்ளியூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட  கிள்ளியூர் பேரூர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த உபேஷ்,  மகேஷ்,  சுபின், மிக்கேல் ஆகியோர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட பல இளைஞர்கள் மாவட்ட செயலாளரும் மாநில அமைச்சருமான மனோ தங்கராஜ் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.      

இந்த நிகழ்ச்சியில்  கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி கோபால், கிள்ளியூர் பேருர் செயலாளர் சத்யராஜ்,   வார்டு உறுப்பினர் ராபின்சன், பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், ஒன்றிய  பொருளாளர் தங்கதுரை, மாவட்ட பிரதிநிதி லாரன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News