விருதுநகரில் பாஜக மகளிர் அணியினர் பிரச்சாரம்
விருதுநகரில் நாரி சக்தி வந்தன் பேரணி மூலம் மத்திய அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு பாஜக மகளிர் அணியினர் பிரச்சாரம் செய்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 11:13 GMT
விருதுநகரில் நாரி சக்தி வந்தன் பேரணி மூலம் மத்திய அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்த பாஜக மகளிர் அணியினர். விருதுநகர் மாரியம்மன் கோவில் திடலில் மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்கும் ரன் பார் நேஷன் ரன் பார் மோடி என்ற கருத்தை மையமாக வைத்து பாஜக மகளிரணியினர் நடத்திய பேரணியை விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் மத்திய அரசு பொதுமக்களுக்கு செய்த நலத்திட்டங்களான உஜ்வாலா,இலவச வீடு,தனிநபர் கழிப்பறை,முத்தரா போன்ற திட்டங்களின் பதாகைகளை கையில் ஏந்திசென்றனர்.
இந்த பேரணி மெயின் பஜார்,முனிசிபல் ஆபிஸ் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளை கடந்து கருமாரிமடம் அருகே நிறைவுபெற்றது.