தமிழ் பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம் 

Update: 2023-11-30 15:55 GMT
ரத்த தான முகாம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டுநலப் பணித் திட்டம்  இணைந்து, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக் கூடத்தில் புதன்கிழமை ரத்ததான முகாமை நடத்தினர். 

இந்நிகழ்ச்சியில், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்   வி.திருவள்ளுவன் தலைமை வகித்து, ரத்ததான முகாமை துவக்கி வைத்து,  ரத்ததானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி  பேசினார். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன்,  வளர்தமிழ்ப் புலத்தலைவர் முனைவர் இரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினராக, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டு, 'மாணவர்கள் ரத்ததானம் மட்டும் செய்வதோடு நின்று விடாமல், உடல்உறுப்பு தானமும் செய்ய வேண்டும்' என்றார்

.  முன்னதாக செஞ்சுருள் சங்கம் ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செ.த.ஜாக்குலின் வரவேற்றார். நிறைவாக, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞா.பழனிவேலு, நன்றி கூறினார்.  இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, ரத்த வங்கி மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, 25 க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றனர்.

Tags:    

Similar News