பெரம்பலூரில் காணாமல் தேடப்பட்ட வாலிபர் சடலமாக கண்டெடுப்பு

பெரம்பலூரில் காணாமல் தேடப்பட்ட வாலிபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Update: 2024-01-22 11:48 GMT

இறந்தவர்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், ஆலம்பாடி சாலையில் வசித்து வந்தவர் செல்வராஜ்- பவுனாம்பாள் தம்பதியரின் மகன் சரவணன்(31) பெரம்பலூர் மகளிர் காவல் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வந்த இவர்,

உறவினர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜனவரி - 21 ம் தேதி நேற்று மாலை வீட்டை விட்டு சென்றவர் இன்று காலை வரை வீடு திரும்பாத நிலையில், இவரது மனைவி சங்கீதா கணவனை காணவில்லை என பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன சரவணனை போலீசார் தேடி வந்த நிலையில், ஜனவரி - 22ம் தேதி இன்று காலை பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதி அருகே சரவணன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த சரவணனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு பொது தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , அவர் எப்படி உயிரிழந்தார் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News