கள்ளக்குறிச்சியில் நாளை புத்தக கண்காட்சி

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மைதானத்தில் நாளை முதல் 19ம் தேதி வரை 10 நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

Update: 2024-02-09 03:15 GMT

பைல் படம் 

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:- புத்தக வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்வதற்காக மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடத்த முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி மைதானத்தில், மாவட்ட நுாலகத் துறை சார்பில்நாளை10ம் தேதி முதல் 19ம் தேதி வரை 10 நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பக அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், 10 நாட்களுக்கு தினமும் மாலை நேரத்தில் நட்சத்திர பேச்சாளர்களின் சிந்தனை சொற்பொழிவு, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்த புத்தக வாசிப்பு முக்கியமானதாகும். இவற்றில் தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டு சேர்ப்பதற்காக இதுபோன்ற புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இப்புத்தக கண்காட்சியில் பங்கேற்று அதிகளவில் புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News