புத்தக திருவிழாவில் புத்தகம் இலவசம்
சிவகங்கை புத்தக திருவிழாவில் தினமும் 20 பேருக்கு புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-29 05:41 GMT
புத்தக திருவிழாவில் புத்தகம் இலவசம்
சிவகங்கை மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறையுடன் பபாசி இணைந்து 3ம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருவிழாவை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடத்துகிறது. கண்காட்சி நுழைவு வாயிலில் வாசகர்களுக்கு கூப்பன் வழங்கப்படும். அதில் பெயர், அலைபேசி எண்ணை எழுதி பெட்டியில் போட வேண்டும். தினமும் குலுக்கல் மூலம் 20 அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு தலா ரூ.500 மதிப்பிலான இலவச புத்தகங்களை வெற்றியாளர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது