எல்லை பாதுகாப்பு படை விழா 10 பள்ளிகளுக்கு விருது வழங்கல்

எல்லை பாதுகாப்பு படை துவக்க நாள் விழா, தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் சுங்குவார்சத்திரத்தில் நடந்தது

Update: 2024-02-17 10:00 GMT

விருது வழங்கல்

'தியாகம் போற்றுவோம்' அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு டிச., 8ல் எல்லை பாதுகாப்பு படை துவக்க நாள் விழா, தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் சுங்குவார்சத்திரத்தில் நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவர்களிடையே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், களிமண் சிற்பம், கவிதை, செதுக்குச் சிற்பம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர். இதில், சிறப்பான பங்களிப்பு வழங்கிய காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பள்ளிகளுக்கு 'எல்லை வீரர்களைப் போற்றும் ஏற்றமிகு பள்ளி' என்ற விருது வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் நடந்தது. இடைநிலை கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில்குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி அவர்கள் பள்ளிகளுக்கு விருதுகளை வழங்கினார். இதில், ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளி, ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன் நகர் அரசு நடுநிலைப் பள்ளி, உத்திரமேரூர் 1-3 வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒலிமுகமதுபேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம்., மேல்நிலைப் பள்ளி, சந்தவேலுார் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளி, மேட்டுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மரிய ஆக்ஸிலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 10 பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டன.
Tags:    

Similar News