வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சேலம் கொண்டலாம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு;
Update: 2024-03-02 07:28 GMT
திருட்டு
சேலம் கொண்டலாம்பட்டி அருகே அரியானூர் பகுதி கோபால் தோட்டத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி விஜயகுமார் (வயது 30). இவருடைய மனைவி பிரபாதேவி (25) ஆட்டையாம்பட்டியில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்று இருந்ததாக தெரிகிறது. நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு பக்கத்து வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பிரபாதேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பிரபாதேவி வீட்டில் பீரோவில் இருந்த 3½ பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.