பேருந்து,இருசக்கர வாகனம் மோதல் - மாணவர் பலி

Update: 2023-12-19 02:08 GMT

பிரித்விராஜன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு அடுத்த காவி தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 47. காட்டாங்கொளத்துார் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 13ம் தேதி காலை செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் மகன் பிரித்விராஜன், 13, மற்றும் அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மகளை, 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். செங்கல்பட்டு- -காஞ்சிபுரம் பைபாஸ் சாலையை கடக்கும் போது, காஞ்சிபுரம் நோக்கி சென்ற கல்லுாரி பேருந்து, மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, நேற்று பிரித்விராஜன் உயிரிழந்தார்.
Tags:    

Similar News