வயலில் களை பறிக்கும் பணி மும்முரம் !

தஞ்சாவூர் அருகே புலவர் நத்தம் பகுதியில் களை எடுக்கும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-04-18 06:12 GMT

விவசாயம்

தஞ்சாவூர் அருகே புலவர்நத்தம் பகுதியில் கோடை நெல் விதைப்பு செய்த வயலில் களை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு சம்பா, தாளடி, குறுவை என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி குறிப்பிட்ட நாளில் அணையில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.

தாமதமாக திறந்தால் குறுவை குறைந்து சம்பா சாகுபடி அதிகரிக்கும். கடந்த ஆண்டு சம்பா, தாளடி, பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் போதிய சாகுபடி கிடைக்கவில்லை.

கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது முன் பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வழக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும்.

வழக்கமாக தஞ்சாவூர் கோட்டத்தில், கோடை நெல்சாகுபடி சுமார் 5ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும்.

தற்போது பம்புசெட் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் புலவர்நத்தம், ராராமுத்திரைக்கோட்டை, சாலியமங்கலம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உழவுப்பணி, பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும், நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகள் நடக்கிறது ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல் பாபநாசம், களஞ்சேரி பகுதிகளில் பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் நெல் விதைப்பு செய்த இடங்களில் நடவு செய்வதற்காக நாற்று பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தஞ்சாவூர் கோட்டத்தில் கோடை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

பம்பு செட் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து நடவு பணிகள் நடந்து வருகிறது. இருந்தாலும் ஆறுகளில் தண்ணீர் திறந்தால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். பல்வேறு இடங்களில் களை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கோடை சாகுபடிக்கு தேவையான உரம் மற்றும் இடுப்பொருட்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு தட்டுப்பாடு இல்லாமல் அதிகாரிகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்" இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News