தனியாரிடம் குடிநீரை விலைக்கு வாங்கி நகராட்சி பொதுமக்களுக்கு விநியோகம்!
புதுக்கோட்டையில் தனியாரிடம் குடிநீரை விலைக்கு வாங்கி நகராட்சி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.;
Update: 2024-05-04 13:43 GMT
புதுக்கோட்டையில் தனியாரிடம் குடிநீரை விலைக்கு வாங்கி நகராட்சி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
புதுக்கோட்டையில் தனியாரிடம் குடிநீரை விலைக்கு வாங்கி கணேஷ் நகர், காமராஜபுரம் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை புதுக்கோட்டை நகராட்சி துவக்கியுள்ளது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையைப் போக்க வல்லதரா கோட்டையிலிருந்து தனியாரிடம் விலைக்கு குடிநீர் வாங்கி இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்த நகராட்சி நிர்வாகம். இன்று முதல் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் கணேஷ் நகர் பகுதியில் விலைக்கு வாங்கிய குடிநீரை இலவசமாக வழங்கும் பணியை செயல்ப்படுத்தியது.மேலும் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.