அடரி பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா
கடலூர் மாவட்டம், அடரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.;
Update: 2024-03-13 01:25 GMT
இலவச மிதிவண்டி வழங்கும் விழா
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடந்தது. இதில், 11ஆம் வகுப்பு படிக்கும் 75 மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரமணி, துணைத் தலைவர் சிலம்பரசன், மற்றும் திமுக நிர்வாகி நிர்மல் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மிதிவண்டி வழங்கினர்.