நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் - பொழிலன்

நாடாளுமன்ற தேர்தலில் பார்ப்பனிய வெறி கொண்ட பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் - தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பேட்டி

Update: 2024-02-20 13:10 GMT
தமிழக மக்கள் முன்னணி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் பேசுகையில்... தமிழக மக்கள் முன்னணி சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாதிவெறி மதவெறி சுரண்டல் வெறி மாநில அடையாளங்களை எல்லாம் அளிக்கும் பார்ப்பனிய வெறி கொண்ட பாஜகவையும் அதோடு கூட்டணியில் உள்ள கட்சிகளையும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசியல் செயல்பாடுகளையும் வீழ்த்த வேண்டும் பாசிச பார்ப்பனிய பாஜகவை எதிர்க்கிற தேர்தல் அரசியல் கட்சிகளை அரசியல் நிபந்தனைகளுடன் மக்கள் ஆதரிக்க பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதில் கல்வி கனிம வளம் கடல் வளம் வரிகள் பெறுவது தொழில் உழவு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கு உரியவை என்ற அறிவிப்பையும். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஆளுநர் என்ற இந்திய அரசு அதிகார அமைப்பு இருக்கக் கூடாது என்றும், அம்பானி அதானி உள்ளிட்ட பன்னாட்டு மூலதனங்கள் எவையும் மாநிலங்களுக்குள் கொள்ளை அடிக்க அனுமதிக்க முடியாது என்றும், மேலும் நடுத்தர சிறு உளவு நிலைகள் உழவு விலை பொருட்களை குறைந்த விலைக்கு கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பிடியிலிருந்து வேளாண்மையை மீட்டெடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கும் கட்சிகளுக்கு நாங்கள் ஆதரவளித்து பிரச்சாரம் செய்வோம் என்ன குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News