சிதம்பரத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு

துணிசிரமேடு கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-08 00:50 GMT

துணிசிரமேடு கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் போராட்டம் குறித்த புகாரின் பேரில் போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அதே ஊரை சேர்ந்த கலிய பெருமாள் மகன் முகிலன், பாக்யராஜ், உதய குமார், தேசிங்கு மகன் சபரி ராஜன், செல்வநாதன் மகன் பிரேம், முகிலன் மனைவி சுதா ஆகியோர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News