சீதப்பட்டி காலணியில் இந்து சாம்ராஜ்ய தின விழா கொண்டாட்டம்

சீதப்பட்டி காலணியில் இந்து முன்னணியினர் இந்து சாம்ராஜ்ய தின விழா கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-23 11:06 GMT

இந்து சாம்ராஜ்ய தின விழா கொண்டாட்டம்

சீதப்பட்டி காலணியில் இந்து முன்னணியினர் இந்து சாம்ராஜ்ய தின விழா கொண்டாட்டம். சாதாரண போர்ப்படை தளபதியின் மகனான சிவாஜி, இந்தியாவில் இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். பெரும் படை அவரிடம் அப்போது இல்லை. பண பலமும் இல்லை.

மிக சாதாரணமான இளைஞர்களை மாவீரர்களாக்கி அவர்களை ஒருங்கிணைத்து படை வீரர்கள் ஆக்கினார். அன்றைய காலத்தில் கொடுங்கோலர்களாக இருந்த முஸ்லிம் மன்னர்களையும், பிரிட்டிஷ் ஆங்கிலேயே கிறிஸ்தவர்களையும் ஒடுக்கி, மதவெறியர்களையும்,

இந்து மத விரோதிகளையும் விரட்டி, அடக்கி, 1674-ம் ஆண்டில் மகாராஷ்டிரா ராய்க்காட்டில் சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தின் சத்ரபதியாக முடி சூட்டிக்கொண்டார். அதனைப் போற்றும் வகையில் வைகாசி மாதம் வளர்பிறை திரியோதசி திதி அன்று இந்து சாம்ராஜ் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை எழுச்சி நாளாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும்,

மக்களை ஒன்றிணைக்கவும் இந்து முன்னணி இந்து சாம்ராஜ்ய தின விழாவை கொண்டாடி வருகிறது. இதன் அடிப்படையில் இன்று, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சீத்தப்பட்டியில், இந்து முன்னணி கரூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சீதப்பட்டி காலனியில் காவி கொடியை ஏற்றி வைத்து, சத்திரபதி சிவாஜி திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி, ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷங்களை எழுப்பி இந்து சாம்ராஜ்ய தின விழாவை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிருஷ்ணன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ஜீவா, முருகேஷ், அப்புகுட்டி உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News