திருப்பூர் : வளர்ச்சி திட்ட பணிகளை சட்டமன்ற குழு தலைவர் ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை அரசு மதிப்பீட்டு குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அவிநாசி லிங்கம் பாளையம் கிராமத்தில் ஏரியினை புனரமைக்கும் பணி , அவிநாசி அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவு கட்டிட கட்டுமான பணி , சேவூர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி , திருப்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் வேலம்பாளையத்தில் இரண்டாம் நிலை அரசு மருத்துவமனை கட்டிட கட்டுமான பணி , ஆண்டிபாளையம் குளம் , இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணி ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை சட்டப்பேரவை அரசு மதிப்பீட்டு குழுவின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இடுவம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டவர்கள் மாணவ மாணவிகளிடம் பள்ளியின் தரம் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது வகுப்பறையில் மின்விளக்குகள் எரியாததை கண்டித்து உடனடியாக பொதுப்பணித்துறையினரை அழைத்து அனைத்து வகுப்பறைகளிலும் மின்விளக்கு எரிவதை உறுதி செய்து ஆய்வு கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் , மின்விளக்கு மற்றும் மின்விசிறி மாணவர்கள் உள்ளே இருக்கும்போது எப்போதும் எரியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் , அரசு மாணவர்களுக்கான சலுகைகளை வழங்கினாலும் அதனை பராமரிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டி அதிகாரிகளை கண்டித்தார்.